

“தமிழகத்தில் 2016-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இக்கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைய வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம், பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத் தில் பங்கேற்ற வைகோ, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவில் சுயநலமும் ஊழலும் இருக்கிறது. திமுகவில் குடும்ப நலனும் ஊழலும் இருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்ட ணியை நடுநிலையாளர்கள் பார்க் கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மதிமுகவை சிதைக்க திமுக முயற்சி த்து தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போது மதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சித்தது. அவர்கள் பக்கம் செல்லவில்லை என்பதால் நிர்வாகிகள் பலரை திமுக இழுக்கப் பார்க்கிறது. அதையெல்லாம் மீறி மதிமுக வீறுகொண்டு எழும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் மக்கள் நலக் கூட்டணி பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக் கும். இந்த கூட்டணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக் கிறோம். இவ்வாறு வைகோ கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
கட்சியிலிருந்து 4 மாவட்டச் செயலாளர்கள் சென்றுவிட்டதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனது அரசியல் முடிவு களில் தவறுகள் இருக்கலாம். ஆனால் எனக்கு துளியும் சுயநலம் கிடையாது. திராவிடக் கொள்கை கள் அழிந்துபோய்விடக் கூடாது என்று பாடுபடும் மதிமுக நன்றாக இருக்கட்டுமே என்று நினைக்க வேண்டிய நீங்கள் (கருணாநிதி), ஏன் மதிமுகவை அழிக்க நினைக் கிறீர்கள்?
மதுரையில் வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு வைகோ பேசினார்.