கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு உத்தரவு

கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து கள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் நேரில் ஆய்வு நடத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி தங்கள் ஊர் திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு முதல்வர் உத்தர விட்டுள்ளார்.

இதையடுத்து, கூடுதல் பேருந் துகள் இயக்க போக்குவரத்து கழகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் நேரில் ஆய்வு பணி களை மேற்கொண்டார்.

மேலும், வெளியூர் செல்லும் தனியார் (ஆம்னி) பேருந்துகளிலும் பொதுமக்கள் பயணிக்க ஏது வாக, அரசு பேருந்து கட்டணத் திலேயே பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்துறை அமைச்சர் நேரில் அறிவுறுத்தி, பயணிகளை இரவு முழுவதும் அனுப்பி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in