

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார். தடுப்பூசி எங்கே? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மேம் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் 18 -44 வயதினருக்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளையில் தனியார் மருத்துவமனைகள், 18 -44 வயதினருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பலரும் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மே முதல் தேதியில் இருந்து 18-44 வயதினருக்கு தடுப்பூசி தயார் என்றார் பிரதமர் மோடி. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார். தடுப்பூசி எங்கே?'' என்று கேட்டுள்ளார்.