

முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் இதுவரை ரூ. 28 கோடி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.
ராம்கோ குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ரூ. 2 கோடி, எம்.ஆர்.எப். லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கே.எம். மேமன் ரூ. 3 கோடி, சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளர் ஐ.சர்வேஸ்வர தீட்சிதர் ரூ. 1 கோடி என ரூ. 6 கோடியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்கள். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை முதல்வர் ஜெயலலிதாவிடம் பல்வேறு தரப்பினர் ரூ. 28 கோடி நிதி வழங்கியுள்ளனர்.