

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதனால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (ஒரு கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக
மே 1 (இன்று) மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 2ஆம் தேதி அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 3ஆம் தேதி அன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 4ஆம் தேதி அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மே 5ஆம் தேதி அன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கும்.
காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு
இரணியல் (கன்னியாகுமரி) 5 செ.மீ., திருமூர்த்தி அணை (திருப்பூர்) 4 செ.மீ., போடிநாயக்கனூர் (தேனி) 3 செ.மீ., திருப்பத்தூர், குழித்துறை (கன்னியாகுமரி) சோத்துப்பாறை (தேனி) தலா 2 செ.மீ., டேனிஷ்பேட்டை (சேலம்) கொடைக்கானல், ஆர்எஸ் மங்கலம் (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடல் அலை உயரம் முன்னறிவிப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மே 2 இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் ஒரு மீட்டர் முதல் இரண்டரை மீட்டர் வரை இருக்கும். மீனவர்கள் அப்பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.