Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி யாருக்கு?- நாளை வாக்கு எண்ணிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைத் தவிர 5 மாநில தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்தன. மின்னணு வாக்கு இயந்திரங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது. சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

கரோனா பரவல் காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச்சாவடியில் மட்டும் கடந்த ஏப்.17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது. தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 76 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில், 5 மாநிலங்களிலும் நாளை (மே 2) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்று அல்லது 2 தவணைகள் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன், முகக்கவசம் அணி தல் உள்ளிட்ட கரோனா கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சூழலை பொறுத்து அந்தந்த மாநில சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 76 மையங்களில் வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14, அதிகபட்சம் 28 மேஜைகள் என மொத்தம் 3,372 மேஜைகள், தபால் வாக்குகளை எண்ண 739 மேஜைகள், சேவை வாக் காளர்களுக்கு 309 மேஜைகள் என 4,420 மேஜைகளில் வாக்கு கள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் 16 ஆயிரத் துக்கும் அதிகமான பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக மேஜைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மேஜையும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, பதிவும் செய்யப்படுகிறது.

அதிகபட்சமாக சோழிங்க நல்லூர் தொகுதியில் 28 மேஜைகள் போடப்பட்டுள்ளன. பல்லாவரம் தொகுதியில் 44 சுற்றுகளாக வாக்கு கள் எண்ணப்பட உள்ளதாக கூறப் படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங் கியதும் முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்படுகின்றன. அதன்பின் 8.30 மணி அளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கு தெரியவரும், அதே நேரம் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவைத் தாண்டியும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். தமிழகம் சார்பில் சத்யபிரத சாஹூ உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கரோனா பர வலைத் தடுக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. நாளை முழு ஊரடங்கு நாளாக இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர் கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x