பள்ளத்தில் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: மலர் தூவி வனத்துறையினர் அஞ்சலி

வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த குட்டி யானைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய வனத்துறையினர்.
வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த குட்டி யானைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய வனத்துறையினர்.
Updated on
1 min read

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனித்தனியாகவும் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட புல் மலையில் ஊசிமலைவனச்சுற்றில் உள்ள மரப்பாலம் பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளத்தில் விழுந்து குட்டியானை உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர்.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியரின் உத்தரவின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பக அட்டகட்டி பயிற்சிமைய அலுவலர் செல்வம் தலைமையில், கால் நடை மருத்துவர் மனோகரன், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனவர்முனியாண்டி, என்.சி.எப். அமைப் பின் கணேஷ் ஆகியோர் அடங்கியகுழுவினர், உயிரிழந்த குட்டி யானைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் குட்டி யானையை உடற்கூராய்வு செய்தனர்.

குட்டி யானை உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும், இரண்டு வயது இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in