தண்டவாளத்துக்கு அருகே வருவதால் கூடுவாஞ்சேரி மேம்பாலம் 1.5 அடி இடித்து மாற்றி அமைப்பு: தாமதமாகும் பணியால் பொதுமக்கள் அதிருப்தி

தண்டவாளத்துக்கு அருகே வருவதால் கூடுவாஞ்சேரி மேம்பாலம் 1.5 அடி இடித்து மாற்றி அமைப்பு: தாமதமாகும் பணியால் பொதுமக்கள் அதிருப்தி
Updated on
2 min read

தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ளதால் கூடுவாஞ்சேரி - மாம்பாக்கம் மேம்பாலம் கட்டுமானப் பணியில் மாற்றம் செய்து இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டுமானப்பணி மேலும் தாமதமாகும் என்றும் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் கூடுவாஞ்சேரி - மாடம்பாக்கம் செல்லும் சாலையின் குறுக்கே செங்கல்பட்டு - தாம்பரம் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. அத னால், அப்பகுதியில் ரயில்வே துறையினர் ரயில்வே கிராசிங் கேட் அமைத்துள்ளனர். முக்கியமான ரயில்தடம் என்பதால் ரயில் செல்வ தற்காக தினமும் 40 முறைக்கும் மேலாக இந்த கேட் மூடப்படுகிறது. இதனால், அச்சாலையை தினந் தோறும் பயன்படுத்தும் ஆயிரக் கணக்கான மக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர்.

இதையடுத்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க 2010-ல் ரூ.14 கோடியை அரசு ஒதுக்கியது. மேலும் 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க கால அளவும் நிர்ணயிக்கப்பட்டது. நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் ரயில்வே துறையினர் ஒப்பந்ததாரர் மூலம், அப்பகுதியில் 750 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கோண்டு வரு கின்றனர்.

ரயில்வே பொதுப்பணித்துறை சட்ட விதிகளின்படி தண்டவாளத் தின் பக்கவாட்டு பகுதியிலிருந்து சுமார் 5 மீட்டர் நீளத்துக்கு அப்பால் தான் பாலம் கட்டப்பட வேண்டும். ஆனால் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை ஒட்டி அமைக்கப் பட்டுள்ள 300 மீட்டர் மேம்பாலப் பகுதி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை அடி தூரத்துக்கு உள்ளே வருகிறது. இதனால் பாதுகாப்புக்கு இடையூறு ஏற் பட்டுள்ளதாகக் கூறி மேம்பாலத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

இதயைடுத்து மேம்பாலத்தின் சில பகுதிகளை உடைத்து இரும்பு ராடுகளை பொருத்தி, அதே அளவு கட்டுமானத்தை கிழக்கு பகுதி யில் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு மண்டல மேம்பால பணிகளின் வட்டாரங்கள் கூறும்போது, மேம் பாலம் மாற்றத்தால் பாலத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. வரும் மே மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தன.

இதுகுறித்து, கூடுவாஞ்சேரி பகுதி மக்கள் கூறும்போது, ‘5 ஆண்டுகளாக மேம்பால பணி கள் நடந்து வந்த நிலையில் தற் போது இடித்து வருகின்றனர். தாமதமாக நடக்கும் பணி யால் கூடுவாஞ்சேரியும் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் சுமார் 15 கிமீ சுற்றிக்கொண்டு செல்ல வேண்டி யுள்ளது’ என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கருத்து கூறும்போது ‘மேம்பாலம் கட்டு மானப்பணி தொடங்கி 5 ஆண்டு கள் கழித்துதான் இந்த விதிமீறல் ரயில்வே துறைக்கு தெரியவந்ததா. அப்படியென்றால் பாலம் கட்டுமான வரைபடத்தை பார்க்காமலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டதா என சந்தேகம் எழுகிறது. விதிமீறல் பற்றி அப்போதே தெரிவித்திருந்தால் வேறு திட்டம் தயாரித்து அதற்கு ஏற்றபடி பாலம் கட்டுமானப் பணி நடந்திருக்கும். அதை செய் யாததால் தற்போது கட்டிய பாலத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதுடன் கால விரயமும் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் செயல்பாடு சிறு பிள்ளைத் தனமாக உள்ளது’ என்று அவர்கள் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in