அப்துல் கலாம் நினைவிடத்தில் வேலி அமைக்க நடவடிக்கை: மத்திய பொதுப்பணித்துறை தொடங்கியது

அப்துல் கலாம் நினைவிடத்தில் வேலி அமைக்க நடவடிக்கை: மத்திய பொதுப்பணித்துறை தொடங்கியது
Updated on
1 min read

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத் துக்காக தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் மத்திய பொதுப் பணித்துறை பணிகளை தொடங்கி யுள்ளது. முதல்கட்டமாக அங்கு வேலி அமைப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறந்த விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவை தொடர்ந்து, அவரது உடல் நல்லடக்கத்துக்காக ராமேசுவரத்தில் தமிழக அரசால் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஜூலை 30-ம் தேதி கலாம் உடல் அடக்கம் நடந்தது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்வர் ஜெயலலி தாவை சந்தித்துப் பேசிய பிரத மர் நரேந்திர மோடி, அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளதால், தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலரும் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து 1.36 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

உயர்நிலைக் குழு

அப்துல் கலாம் நினைவகம் அமைப்பது தொடர்பாக உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ம் தேதி நடந்தது. கூட்டத்தில் நிலம் ஒதுக்கிய முதல்வர் ஜெய லலிதாவுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நன்றி தெரிவித்தார்.

தற்போது தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in