

தமிழகத்தில் பெய்த கன மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மதுரை மண்டலத்தில் உள்ள வேலம்மாள் நிறுவனக் கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி னர். இந்த நிதி ரூ.25 லட்சம் சேர்ந் தது. மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக் கான காசோலையை வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் நேற்று வழங்கினார்.
அப்போது மதுரை வேலம் மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் எஸ்.அசோகன், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவர் கணேஷ் நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து வேலம்மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் எஸ்.அசோகன் கூறும் போது, ‘வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 17 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 3 நாட்களாக சென்னை யில் முகாம் நடத்தி வருகின்றனர். ரூ.5 லட்சத்துக்கும் அதிக மதிப் புள்ள மருந்துகள் இந்த முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப் படுகின்றன. மேலும் 2 லாரிகளில் போர்வை, புதிய துணிகள், உண வுப் பொருட்கள் உட்பட நிவாரணப் பொருட்கள் மதுரையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் சேவையின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாகும். மீட்புப் பணிக்காக வந்துள்ள ராணுவத்தினர் தங்குவதற்கு சென்னையிலுள்ள வேலம்மாள் பள்ளியில் வசதி செய்து தரப்பட் டுள்ளது. சென்னையில் உள்ள எங்கள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தோர் நிவாரணப் பொருட் களை பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து விநியோகித்து வருகின்றனர். இப்படி பல்வேறு வழிகளில் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறோம்’ என்றார்.