

தமிழகம் முழுவதும் 15 நாட்கள் இலவச பேருந்துகளை இயக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி திருச்சி உறையூரைச் சேர்ந்த மாது (28) என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபா கரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசார ணைக்கு வந்தது. வெள்ள நிவாரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் தனது கோரிக்கைக்காக அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.