வாணியம்பாடி அருகே சோகம் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

லட்சுமியம்மாள்-அண்ணாமலை (கோப்புப்படம்).
லட்சுமியம்மாள்-அண்ணாமலை (கோப்புப்படம்).
Updated on
1 min read

வாணியம்பாடி அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவி யும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை செங்குந்தர் மண்டபத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(80). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி யம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

அண்ணாமலை தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தை களுடன் அம்பூர்பேட்டையில் வசித்து வந்தார். 50 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வந்த அண்ணாமலை வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங் களாக வியாபாரத்துக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். அவருக்கு தேவையான உதவிகளை லட்சுமியம்மாள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனது மிதிவண்டி யில் வாணியம்பாடிக்கு செல்ல புறப்பட்டார். அப்போது தவறி கீழே விழுந்து காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தார் ஏற்பாடு செய்வதற்குள் அவர் உயிரிழந்தார்.

இதையறிந்த அவரது மனைவி லட்சுமியம்மாள் கணவர் உடலை பார்த்து கதறி அழுதபடி அவர் மீது சாய்ந்தார். பிறகு அவரும் எழுந்திருக்கவில்லை. இதைத்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் லட்சுமியம்மாளை எழுப்ப முயன்றபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த தகவல் அப்பகுதி முழுவதும் நேற்று பரவியது. ஏறத்தாழ 60 ஆண்டுகளாக இணைப்பிரியாமல் ஒன்றாக இருந்து, 2 தலைமுறைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த அண்ணா மலையும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அன்பில் பறவைகளாய் வாழ்ந்து ஒரே நாளில் உயிரிழந்த பாசமுள்ள தம்பதிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாழ்விலும், மரணத்திலும் ஒன்றாக சங்கமித்த அண்ணாமலை, லட்சுமியம் மாளையும் அருகருகே அடக்கம் செய்த அவரது குடும்பத் தார் அவர்களுக்கான இறுதி மரியாதை செலுத்தியது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in