Published : 29 Apr 2021 08:14 PM
Last Updated : 29 Apr 2021 08:14 PM

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; புதுச்சேரியில் என்.ஆர்.காங் - அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல், புதுவை, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அன்று மாலையே வெளியாகும். இம்முறை மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால், அந்தத் தேர்தல் முடிந்த பின்னரே கருத்துக்கணிப்பு வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மற்ற மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் இன்றுடன் (ஏப். 29) முடிவடைவதால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பான 'எக்சிட் போல் இன்று (ஏப்ரல் 29) மாலை 7 மணியளவில் வெளியானது.

இதில் ஏபிபி - சி வோட்டர் (ABP - C Voter) இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு விவரத்தின்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிகள் பெறும் எனக் கணிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை விவரம்:

காங்கிரஸ் - திமுக கூட்டணி - 8 தொகுதிகள்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி - 21 தொகுதிகள்

மற்றவை - 1 தொகுதி

வாக்கு சதவீதம்

காங்கிரஸ் - திமுக கூட்டணி - 34.20%

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி - 47.1%

மற்றவை - 18.70%

ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்:

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணி - 16-20 தொகுதிகள்

காங்கிரஸ் - திமுக கூட்டணி - 11-13 தொகுதிகள்

மற்றவை - 0

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x