

சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கரோனா 2-வது அலை தீவிரம்மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் தினமும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் நேற்றும் ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள், டெல்லி செல்லும் 3 விமானங்கள், கோவை செல்லும் 3 விமானங்கள், பெங்களூரு செல்லும் 3 விமானங்கள், மும்பை செல்லும் 2 விமானங்கள் மற்றும் மதுரை,கொல்கத்தா, கொச்சி, ராஞ்சி, அகமதாபாத், இந்தூர், அந்தமான், கோவாஉள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 25 விமானங்களும் ரத்தாகியுள்ளன.
மேலும், சிங்கப்பூர், கோலாலம்பூர் சிறப்பு விமானங்களும்ரத்து செய்யப்பட்டுள்ளன. பலவிமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.