

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் விளக்கினார்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசினார். அப்போது, மாதந்தோறும் வழக்கமாக வழங் கப்படும் சட்டம்-ஒழுங்கு தொடர் பான அறிக்கையை அளித்தார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் விளக்கினார்.
அத்துடன் மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை, மே 2-ல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமைச் செயலாளர் சந்திப்பின்போது, அரசின் நடவடிக்கைகளை பாராட்டிய ஆளுநர், முன்கள பணியாளர்களின் சேவைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கான ஆக்சிஜன், உயிர்காக் கும் மருந்துகள் ஆகியவற்றை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு இருப்பு வைக்க வேண் டும். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் களை ஏற்படுத்த சரியான திட்டம் வகுக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிப்ப துடன், மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள், இளை ஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்ய முன்வர வேண்டும். பொதுமக்கள் கரோனா வழிமுறைகளை பின்பற்றி, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகழுவுவதுடன், சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள் ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் செந்தில் குமார், ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் ஆகியோர் இருந்தனர்.