Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்: பக்தர்கள் வருகையை தடுக்க 144 தடை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோயிலில் இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜையில் யாக குண்டத்தை வணங்குகிறார் 27-வது தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமார்ச்சார்ய சுவாமிகள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல் நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி, செல்வமுத்துக் குமார சுவாமி கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மகா கும்பாபிஷேகம் இன்று (ஏப்.29) நடைபெற உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், எஸ்.பி ஸ்ரீ நாதா பரிந்துரையின்பேரில், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இன்று (ஏப்.29)) காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஆட்சியர் லலிதா நேற்று உத்தரவிட்டார்.

இதன்படி, மடவிளாகம், சன்னதி தெரு உள்ளிட்ட நான்கு ரத வீதிகளில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது எனவும், மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இன்று கோயிலுக்கு தரிசனம் செய்ய வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு

மேலும், தருமபுரம் ஆதீனத்தின் https:\\youtube.com\channel\UCuaWaO89E8H4_6RPKlceuYw என்ற யூடியூப் சேனலிலும், பொதிகை டிவி மற்றும் அதன் https:\\youtube.com\c\DoordarshanPodhigai என்ற யூடியூப் சேனலிலும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x