சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு தயாரான மலர் நாற்றுகள் அழுகும் அவலம்: குன்னூரில் உற்பத்தியாளர்கள் கவலை

சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு தயாரான மலர் நாற்றுகள் அழுகும் அவலம்: குன்னூரில் உற்பத்தியாளர்கள் கவலை
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான பல்வேறு வகை மலர் நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் குடில்கள் அமைத்து, மலர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பராமரிக்கப்படும் நாற்றுகளை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளும் வீடுகளில் வளர்க்க வாங்கி செல்வார்கள். குறிப்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு, நர்சரிகளில் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் அரியவகையான மூலிகைச் செடிகள், அலங்கார தோரணச் செடிகள், மலர் நாற்றுகள், மர நாற்றுகள், நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய பழ நாற்றுகள் மற்றும் கற்றாழை செடிகளும் அடங்கும்.

இந்த மலர் நாற்றுகளை மூன்று மாதங்களுக்கு முன்பே நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த நாற்றுகள் அனைத்தும் விற்பனைக்கு தயாராகியுள்ளன. ஆனால், கரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளதாலும், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாலும், இந்த நாற்றுகளை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இதனால், அவை அழுகி வீணாகி வருகின்றன.

இதுதொடர்பாக நாற்றுகள் உற்பத்தியாளர் ஜாகீர் கூறும்போது, "கரோனாவால் விற்பனை இல்லாமல் பல லட்சம் மதிப்பிலான செடிகள் அழுகும் நிலையில் உள்ளன. சென்ற ஆண்டு கரோனா பாதிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், மீண்டும்மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கவலையளிக்கிறது’’ என்றார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நாற்றங்காலில் நாற்றுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in