Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: பாதுகாப்பான மாவட்டமாக அறிவித்த சுகாதாரத்துறை

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இது வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் பிற மாவட்டங்களை விட பாதுகாப்பான மாவட்டமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று இதுவரை மொத் தம் 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1616 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 180 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கரோனா பாதிப்பால் இறப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. கரோனா தொற்றுடன் இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இறப்பது அவ்வப்போது உள் ளது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 208 பேர் உயிரி ழந்துள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கோவிட் மையங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரி, பழநியிலுள்ள பழநி யாண்டவர் கல்லூரி, காந்தி கிராமம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் கோவிட் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் திண்டுக்கல், பழநியில் உள்ள கோவிட் மையங்களில் 200-க்கும் மேற்பட்ட கரோனா தொற்றாளர்கள் முதற்கட்ட கண்காணிப்பில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250-க்கும் தடுப்பூசிகள் செலுத் தப்படுகின்றன. மக்களும் ஆர்வ முடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கி ன்றனர். தடுப்பூசிகள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி வரவழைக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக் கின்றனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத நிலை உள் ளது.

ஆக்சிஜன் செலுத்தும் அள வுக்கு கரோனா நோய் தீவிர பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகம் இல்லை என்பதால் ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாகவே அரசு மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பாதுகாப்பான மாவட்டமாகவே இதுவரை உள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x