1 கோடி மரக்கன்று நடும் திட்டம் கலாம், நடிகர் விவேக்கின் பணியை தொடருவோம்: வாடிப்பட்டியில் உறுதி ஏற்ற ஓட்டுநர்கள்

சோழவந்தான் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தென்னங்கன்று நட்ட வேன் ஓட்டுநர்கள் சங்கத்தினர்.
சோழவந்தான் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தென்னங்கன்று நட்ட வேன் ஓட்டுநர்கள் சங்கத்தினர்.
Updated on
1 min read

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், நடிகர் விவேக் கின் மரக்கன்று நடும் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என வாடிப்பட்டியில் வேன் ஓட்டுநர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

வாடிப்பட்டி சந்தை வாசல் பகுதியில் வேன் ஓட்டுநர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணி, முருகன், பொன்னுச்சாமி, பாலமுருகன், கோபி ஆகியோர் ஒருங்கி ணைந்து வெப்பமயமாதலைத் தணிக்கும் விதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நடிகர் விவேக் ஆகியோரின் 1 கோடி மரக்கன்று நடும் கனவுத்திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் சோழ வந்தான் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டு பணியைத் தொடங்கினர்.

வாடிப்பட்டி சந்தைவாசல் வேன் ஓட்டுநர்கள் சங்க ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன் இதுகுறித்து கூறியதாவது:

அப்துல்கலாம், விவேக் விதைத்த விதைகள் இன்று மரமாகி உள்ளன. அவர்களின் வழியில் எங்கள் வருவாயில் குறிப்பிட்ட தொகையில் மரக்கன்றுகளை நடவு செய்வோம். தேவைப்படுவோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in