

சிவகங்கை மாவட்டம், திருப் புவனம் அருகே கொந்தகை யில் நடந்த அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் குறியீடுகளுடன் கூடிய 3 கருப்பு, சிவப்பு மண் குவளைகள் கண் டெடுக்கப்பட்டன.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் தோண்டப்பட்டன. கொந்தகையில் இதுவரை 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 முதுமக்கள் தாழிகளில் எலும் புகளும், 3 கருப்பு, சிவப்பு மண் குவளைகளும் இருந்தன.
இதில் ஒரு முதுமக்கள் தாழியில் 19.5 செ.மீ. விட்டம், 4.5 செ.மீ. உயரமுள்ள கருப்பு, சிவப்பு மண் குவளை இருந்தது. மேலும் ஒரு குவளை சேதமடைந்திருந்தது. அதேபோல், மற்றொரு முதுமக்கள் தாழியில் 14 செ.மீ. விட்டம், 16 செ.மீ. உயர மண் குவளை சிறிது சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்த மண் குவளைகளில் சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இது எதை குறிக்கிறது என்பது அடுத்த கட்ட ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.