

வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆந்திர, கேரளா பஸ்கள் இலவச சேவை அளிப்பதாக அம்மாநில அரசுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக கேரளா மற்றும் ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் இருந்து வெளி மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் பயணிகள் இன்று (சனிக்கிழமை) இலவசமாக பயணம் செய்யலாம். கோயம்பேட்டிலிருந்து புறப்படும் பஸ்களில் செல்வோர் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.