

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றார். இந்நிலை யில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாளை (8-ம் தேதி) சென்னை வருகிறார். அவர், சென்னையில் வடசென்னை, தென் சென்னை உட்பட சில பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது. இத்தகவல்களை தமிழக காங்கிரஸ் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.