திடீர் ஊரடங்கு ஏற்புடையதல்ல; அதிகாரிகள் கடைகளை பூட்டினால் அரசு அலுவலகங்கள் முற்றுகை: வணிகர் சங்கம் எச்சரிக்கை

திடீர் ஊரடங்கு ஏற்புடையதல்ல; அதிகாரிகள் கடைகளை பூட்டினால் அரசு அலுவலகங்கள் முற்றுகை: வணிகர் சங்கம் எச்சரிக்கை
Updated on
1 min read

திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. இதனைக் காரணம் காட்டி அதிகாரிகள் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. அதிகாரிகள் வியாபாரிகளின் கடைகளைப் பூட்டினால் அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படும்.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வியாபாரிகள் விரோதமாக உள்ளதை சுட்டி காண்பித்தும், எங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் ஆட்சியாளர்கள் இடத்தில் மனு அளிக்கப்பட உள்ளது.

ஊரடங்கு எப்படி அறிவித்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கு சரியாக இருக்கும் என்பதை எங்களை ஆலோசித்து அரசு அறிவிக்க வேண்டும். திடீரென ஊரடங்கை அரசு அறிவிப்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தீவிரம் கண்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு ஞாயிறு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in