பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும் கருவி: வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வடிவமைப்பு

பக்கவாத நோயாளிகளின் கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும் கருவியை உருவாக்கிய வேலம்மாள் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர்கள்.
பக்கவாத நோயாளிகளின் கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும் கருவியை உருவாக்கிய வேலம்மாள் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர்கள்.
Updated on
1 min read

பக்கவாத நோயாளிகளின் கணுக்கால் இயக்கத்தை மேம் படுத்தும் கருவியை மதுரை வேலம்மாள் பொறியியல் கல் லூரி பேராசிரியர்கள் உருவாக் கியுள்ளனர்.

கரோனாவால் பக்கவாத நோயாளிகள் பிசியோதெரபி நிபுணர் கண்காணிப்பில் இயன்முறை சிகிச்சையும், உடற்பயிற்சியும் செய்ய முடி யாமல் சிரமப்படுகின்றனர். அவர்களது கணுக்கால் இயக் கத்தை மேம்படுத்தும் வகையில், துணை உபகரணங்களை மதுரை வேலம்மாள் பொறியியல் கல் லூரி இயந்திரவியல் துறை பேரா சிரியர்கள் எம்.மாறன், தி.காமாட்சி, என்.தினேஷ்குமார், உதவிப் பேராசியர்கள் மோ.விவேக் பிரபு, க.மீனாட்சிசுந்தர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

இந்தத் துணை சாதனங்களின் உதவியோடு பக்கவாத நோயாளி கள் விரைவில் குணமடைய முடியும். இக்கருவிகளை மக் கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், குறைந்த விலையில் உருவாக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) நிறுவனம் 2021 மார்ச்சில் ரூ.21.43 லட்சம் ஆய்வு நிதியாக வழங்கியது.

இதுகுறித்து இயந்திரவியல் துறைத் தலைவர் ஜி.மணிகண்டன் கூறியதாவது: இத்திட்டத்துக்கான ஒப்புதல் எங்கள் துறையின் தொடர் ஆராய்ச்சிக்கான அங்கீ காரம்.

ஏற்கெனவே கால், கை விரல் இயக்கத்தை மேம்படுத்த உருவாக்கிய சாதனத்துக்கு 2019-ல் ரூ.34 லட்சம் கிடைத்தது. மேலும், கால்நடைகளுக்கான பூச்சி மருந்து செலுத்தும் ஊசியை வடிவமைத்ததற்கு 2018-ல் ரூ.28 லட்சம் நிதி கிடைத்தது என்றார்.

கல்லூரி முதல்வர் என்.சுரேஷ் குமார் கூறுகையில், இதுபோன்ற ஆய்வுகளை மத்திய அரசு நிறுவனங்களின் நிதியுதவியுடன் தொடர்ந்து செயல்படுத்துவது இயந்திரவியல் துறையின் தனித் துவம் என்றார்.

வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராம லிங்கம் கூறுகையில், இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தயாராக உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in