பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை: நெல்லை ஆட்சியரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை

பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை: நெல்லை ஆட்சியரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட சிகை அலங்காரத் தொழிலுளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று திரண்டு வந்தனர்.

பின்னர், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முக வேல்முருகன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில், “கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூர் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த ஆண்ட கரானா தொற்று பரவல் ஏற்பட்போது சலூன் கடைகள் அடைக்கப்பட்டதால் 6 மாத காலமாக முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

வாழ்வாதாரத்தை இழந்து பசி, பட்டினியோடு சிரமப்பட்டனர். சிலர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்தது.

நிவாரண உதவியாக அரசால் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாயும் சிலருக்கு மட்டுமே கிடைத்தது.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை. அந்த பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் மீண்டும் சலூன் கடைகளை அடைக்க அறிவிப்பு செய்திருப்பது பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

எனவே, இந்த அறிவிப்பை மறு பரிசிலனை செய்து, எங்கள் வாழ்வாதாரத்துக்கு சலூன் கடைகளைத் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நோய்த்தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பணி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in