

“ஓபிஎஸ்ஸை எதிர்த்து நிற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு தோதான ஆண்டிபட்டியிலேயே நிற்கிறேன்” என்று தான் சொன்னாராம் திமுகவின் திடீர் கொபசெ தங்க தமிழ்ச்செல்வன். ஆனால், “தைரியமாக நில்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லி அறிவாலயம் தான் அவரை போடியில் இறக்கிவிட்டதாம்.
தேர்தல் செலவுக்கு 15 சி வரைக்கும் தலைமையிலிருந்து வந்து சேரும் என்று முதலில் சொன்னார்களாம். ஆனால், 7 சி யுடன் கேட் போட்டுவிட்டார்களாம். பத்தும் பத்தாதுக்கு 2 சி கடன் வாங்கி செலவழித்த தங்கம், கடைசி ரவுண்டில், “ஓபிஎஸ் ரொம்ப திணறுறாரு. ட்ரெண்ட் நமக்கு சாதகமா இருக்கு. இன்னொரு 5 சி குடுத்தீங்கன்னா அடிச்செறிஞ்சு பாத்துடலாம்” என்று தகவல் சொன்னாராம்.
அதற்கு, “இந்த ட்ரெண்டை செட் பண்ணுனதே நாங்க தான்... நீங்கபாட்டுக்கு இப்ப போற ரூட்லயே போய்க்கிட்டு இருங்க போதும்” என்று பதில் சொல்லி தங்கத்தின் வாயை தந்திரமாக அடைத்துவிட்டார்களாம் அறிவாலயப் பூசாரிகள். இதனிடையே, ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க அதிமுக பெருந்தலை ஒருவர் மூலமாகவும் தங்கத்துக்கு தாராள உதவி கிடைத்ததாகவும் தேனி மாவட்டத்தில் ஓரு பேச்சு ஓடுகிறது.