

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து விவாதிப் பதற்காக முதல்வர் பழனிசாமி தலைமை யில் சென்னையில் இன்று (ஏப்.26) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
கரோனா 2-வது அலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமி்ழகம் உள்பட 11-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிக வேகமாக தொற்று அதிகரித்து வருகிறது. இதனிடையே, பல மாநிலங்களில் கரோனா நோயாளி களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை இலவசமாக வழங்க தயாராக இருக் கிறோம் என்றும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஆலை நிர் வாகம் கோரியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர் லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதுபற்றி தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக் சிஜன் தயாரிக்க அனுமதி அளித்த தாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்டெர் லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத் திக்காகக்கூட திறக்கக்கூடாது என்று தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவ காரம் மற்றும் கரோனா தொற்று அதி கரித்து வருவது குறித்து விவாதிப் பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசு தீர்மானம்
மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கைப்பற்றி ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளலாமா என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப் பதாக தெரிகிறது. இதில் விவாதிக் கப்படும் விவகாரம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப் படுகிறது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை யில் ஆக்சிஜன் தயாரிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப் பிடத்தக்கது.