தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்: மதுரையில் இன்று இறுதிச் சடங்கு

தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்: மதுரையில் இன்று இறுதிச் சடங்கு
Updated on
1 min read

தமிழறிஞர் தமிழண்ணல் (88) நேற்று முன்தினம் இரவு காலமானார். மதுரையில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம், நெற் குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழண்ணல். மதுரை வண்டியூரில் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். இவருக்கு மனைவி தெய்வானை, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். தமிழண்ணல் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. தமிழண்ணல் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது உடலுக்கு முன்னாள் துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், முன்னாள் அமைச்சர்கள், தமிழ் அமைப்பினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழண்ணல், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

தலைவர்கள் இரங்கல்

கருணாநிதி:

நான் எழுதிய ‘தொல்காப்பியப் பூங்கா’ நூலின் முதல் பதிப்பினை தமிழண்ணல் தான் வெளியிட்டார். அவரது மறை வால் வருந்தும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்.

வைகோ:

தமிழண்ணல் ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ அமைப்பை உருவாக்கி, தமிழை பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேண வேண்டும் எனப் போராடியவர்.

ராமதாஸ்:

தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்தியவர் தமிழண்ணல்.

இரா.முத்தரசன்:

தமிழ்மொழி வளர்ச்சியில் தொடர்ந்து போராடி யவர் தமிழண்ணல். தலைசிறந்த தமிழ் ஆய்வாளர்களை உருவாக்கி வழி நடத்தியவர்.

கி.வீரமணி:

தமிழ் உணர்வு, தமிழின உணர்வுகளில் சமரசம் காணாத பெருமகனார் தமிழண்ணல். அவர்தம் மறைவு தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தளத்துக்கு மிகப்பெரிய இழப் பாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in