

மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை ஆணையர் தி.அனிதா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்.26-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே கள்ளழகர் கோயில் மற்றும் உப கோயில்களில் ஏப். 26-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மேலும் தற்போது நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி எவ்வித மாறுபாடுமின்றி தொடர்ந்து பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தினுள் நடைபெறும். பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகரை நேரில் தரிசிக்க அனுமதி இல்லை.
எனவே www.tnhrce.gov.in; www.alagarkoil.org என்ற இணையதள முகவரியிலும் youtube arulmigu kallalagar thirukkoil alagarkoil மற்றும் முகநூல் பக்கம் ஆகியவற்றில் நேரலையில் கள்ளழகரை தரிசிக்கலாம். கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பங்களிப்புடன் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி திருவிழா தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.