

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கத்தை அரசு அறிவித்தது.
அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் இன்று அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தால் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகிறது.
இன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து மளிகை கடைகளும், டீக்கடைகள், உணவகங்களும் மூடப்பட்டிருந்தது. ஒரு சில உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய காரணங்கள் இன்றி வெளியே செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொகையை போலீஸார் வசூலித்தனர்.
சிலர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவ சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்கள் எடுத்துச் செல்ல தடை இல்லாததால், தங்குதடையின்றி மேற்கண்ட வாகனங்கள் சென்று வருகின்றன.