

மருத்துவர்கள் கரோனா பணிக்கு செல்வதால், செவிலியர், உதவியாளருடன் மினி கிளினிக் இயங்கும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 1,950 மினிகிளினிக்குகள் உள்ளன. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘‘கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மினி கிளினிக்குகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் கரோனா சிகிச்சை பணிக்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுகின்றனர்’’ என்றார்.
இதனால், மருத்துவர்கள் இல்லாமல் மினி கிளினிக் செயல்படுமா, அங்கு தொடர்ந்து கரோனாதடுப்பூசி போடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, ‘‘மினி கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர் மட்டுமே கரோனாசிகிச்சை பணிக்காக அனுப்பப்படுகின்றனர். செவிலியர்கள், உதவியாளர்களுடன் மினி கிளினிக்செயல்படும். கரோனா தடுப்பூசியும் தொடர்ந்து போடப்படும்” என்றார்.