

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோச னைக் கூட்டம் திமுக மாவட்ட பொறுப்பாளரும், கரூர் தொகுதி வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், செந்தில்பாலாஜி பேசியது: வாக்கு எண்ணும் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அதன் தோல்வி பயத்தை காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதி அதிகாலை 5 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் வந்துவிட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், திமுக வேட்பாளர்கள் (அரவக்குறிச்சி) ஆர்.இளங்கோ, (குளித்தலை) ரா.மாணிக்கம், (கிருஷ்ணராயபுரம்) சிவகாமசுந்தரி, திமுக வழக்கறிஞர் மணிராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டத் தலைவர் பெ.ஜெயராமன், கொமதேக நிர்வாகி சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கந்தசாமி உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகம் வரி வசூலை நிறுத்தி வைக்கவேண்டும். கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தேவையான எண்ணிக்கையில் நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.