வெள்ள நிவாரணத்துக்கு பஜாஜ் குழுமம் ரூ.10 கோடி நிதி

வெள்ள நிவாரணத்துக்கு பஜாஜ் குழுமம் ரூ.10 கோடி நிதி
Updated on
1 min read

பஜாஜ் ஆட்டோ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தலா ரூ.5 கோடியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கின்றன.

சென்னையிலும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக இத்தொகையை இந்நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பாக வழங்கியிருக்கின்றன.

பஜாஜ் ஆட்டோ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறும்போது, “தமிழகம் எதிர்பாராத இயற்கை பேரிடரை சந்திருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு சொத்துகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. மக்கள் இந்த பெரும் துயரிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்கும், அவர்களது வாழ்க்கையை மறுகட்டமைப்பு செய்யவும் நமது உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காகவும் அரசின் முயற்சிகளோடு நாங்களும் இணைந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in