Published : 25 Apr 2021 05:30 AM
Last Updated : 25 Apr 2021 05:30 AM

சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு திட்டம்: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தகவல்

கரோனா சூழலால் பாதிக்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நேரடி நிவாரணம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசின்முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்தார்.

‘கரோனாவுக்கு பின்பு சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழலை சமாளிப்பதற்கான கொள்கைகளை வகுப்பது’ குறித்த கருத்தரங்கம் சென்னை இன்டர்நேஷனல் சென்டர் சார்பில் இணையவழியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கலந்துகொண்டு பேசியதாவது:

அச்சம் வேண்டாம்

கடந்த ஆண்டு கரோனா பரவலின் தொடக்க நிலையிலேயே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏனென்றால், அப்போது கரோனா
புதுவித வைரஸ் என்பதால் அதுகுறித்த எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. அந்த பேரிடரை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. எனவே, பொதுமக்கள் உட்பட அனைவரும் பயம் தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும்.
பிரதமர் கூறியதுபோல அரசின்கடைசி ஆயுதம்தான் முழு ஊரடங்கு. அதற்கு முன்னதாகவேநோய் பரவலை கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு ஏதுவாக மக்கள் முகக் கவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
கடந்த ஆண்டு கரோனா சூழலால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதை சரிசெய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அவை தோல்வியடைந்தன.

அதே நேரம், நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சூழலுக்கேற்ப படிப்படியாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதனால் சீரான வளர்ச்சியில் பயணித்து தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம். எனவேதான் அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது.கரோனா 2-வது அலை பரவல்முன்கூட்டியே கணிக்கப்பட்டு
விட்டது. அதற்கேற்ப, கும்பமேளா, தேர்தல் பிரச்சாரம் போன்ற அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசிகள் தேவையான அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அனைவரும் வதந்திகளை தவிர்த்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா சூழலால் பாதிக்கப்படும் சிறு,குறு நிறுவனங்கள், தொழிலா
ளர்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் டிவிஎஸ் கேபிடல்ஸ் ஃபண்ட்ஸ் நிறுவனர் கோபால் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x