

அம்பத்தூர் அருகே உள்ள முகப் பேர் மேற்கு பகுதியில் மழை வெள்ள நிவாரண உதவிக் கான கணக்கெடுப்பு பணி பார பட்சமாக நடப்பதாகக் கூறி மறி யலில் ஈடுபட்ட மக்கள், அவ்வழியே சென்ற பால்வளத் துறை அமைச்சர் ரமணாவை முற்றுகை யிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, பாதிப்பு கள் குறித்த கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. முகப் பேர் மேற்கு பகுதியில் மாடிப்பகுதி யில் உள்ள குடியிருப்புகளை களப்பணியாளர்கள் கணக்கெடுக் காமல் புறக்கணித்ததாக கூறப்படு கிறது.
மேலும், ஆளுங்கட்சியான அதிமுக கவுன்சிலர்களின் வார்டு களைத் தவிர முகப்பேர் மேற்கு பகுதி அடங்கிய காங்கிரஸ், திமுக ஆகிய எதிர்க்கட்சி கவுன் சிலர்கள் வார்டுகளில் இது வரை விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி விநியோகிக் கப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. இதுதொடர் பாக அரசுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஏற்கனவே ஒட்டப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத் தைக் கண்டித்து முகப்பேர் மேற்கு பஸ் நிலையம் எதிரே நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 91 வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச் செல்வன் (காங்கிரஸ்) தலை மையில் நடந்த இப்போரராட்டத்தில் பெண்கள் உள்பட 500 க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த பால்வளத்துறை அமைச்சர் ரமணாவை பொதுமக்கள் முற்று கையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். அவர்களை சமாதானப் படுத்திய அமைச்சர், அடுக்குமாடி குடியிருப்புகளின் அனைத்து தளங் களிலும் வெள்ள நிவாரண கணக் கெடுப்பு நடத்தவும், விலையில்லா பொருட்களை விநியோகிக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு புறப்பட்டார்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் வர வேண்டும் எனக்கோரி தொடர்ந்து மறியல் நடந்தது. இதையடுத்து அம்பத்தூர் வட்டாட்சியர் பால முருகன் மற்றும் போலீஸ் உயர திகாரிகள் வந்து சமாதான பேச்சு நடத்தினர். அப்போது, வட்டாட் சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.