ரூ.20 லட்சம் வெள்ள நிவாரண உதவி பொருட்கள்: அள்ளித் தந்த கோவை மக்கள்

ரூ.20 லட்சம் வெள்ள நிவாரண உதவி பொருட்கள்: அள்ளித் தந்த கோவை மக்கள்
Updated on
2 min read

சென்னை, கடலூர் மழை வெள்ள நிவாரண உதவிகள் ‘தி இந்து’-கேபிஎன் மூலமாக மாவட்டந்தோறும் குவிந்து கொண்டிருக்கிறது.

கோவை நகரில் மட்டும் கடந்த 2 நாட்களில் ரூ.20 லட்சம் மதிப்புக்கும் மேலான நிவாரண உதவி பொருட்களை அளித்திருக்கிறார்கள் நல்ல உள்ளம் படைத்த மக்கள். இந்த பொருட்களை ரோட்டரி கிளப் சென்ட்ரல் மற்றும் ராம்நகர் கோயில் நண்பர்கள் குழுவினர் ஒருங்கிணைந்து திரட்டியுள்ளனர்.

‘தி இந்து’-கேபிஎன் மூலம் வெள்ள நிவாரண உதவிகள் அனுப்பி வரு வதையடுத்து, ரோட்டரி கிளப் கோய முத்தூர் சென்ட்ரல் உறுப்பினர்கள் குழு, ‘தி இந்து’ பதாகையுடன் நேற்று முன்தினம் தன்னிச்சையாக களத்தில் இறங்கியது.

ராம்நகர் அசோகா பிரேமா கல்யாண மண்டபத்திலும், சாய்பாபா காலனி, பாரதி பார்க் ரோடு, 6-வது கிராஸில் டாக்டர் ரங்கராஜன் கிளினிக்கிலும், ஜிஎன் மில்ஸ், பாலாஜி நகர் அனாதி பவுண்டேஷன், புலியகுளம் ரோடு விக்னேஷ் மகாலிலும் என 3 வெள்ள நிவாரண சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தினர்.

அங்கெல்லாம் சர்வஜித், கிருஷ்ணகுமார், சூர்யா, ஷ்யாம், கணேஷ் சங்கர் என பொறுப்பாளர் களை நியமித்து செல்போன் எண் களும் கொடுத்து துண்டு நோட்டீஸ் கள், வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ் மூலம் நண்பர்கள் அனைவருக்கும் தகவல்கள் பகிரப்பட்டன.

அதையடுத்து நேற்றும், நேற்று முன்தினம் (04.12.2015) மட்டும் அரிசி 35 மூட்டைகள், 10 ஆயிரம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், பருப்பு சுமார் 50 கிலோ, சப்பாத்திகள் 8,000 செட் (பட்டர் மற்றும் ஜாமுடன்), பிஸ்கட் பாக்கெட்டுகள் 210 பெட்டிகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பால் பவுடர் பாக்கெட்டுகள், ரூ.115 மதிப்புள்ள 1500 போர்வைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள், 230 ஸ்டவ் அடுப்புகள், டார்ச் லைட்டுகள், சேனிடரி நாப்கின்ஸ் என கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளித் தந்து விட்டனர் கோவை மக்கள்.

இதுகுறித்து இந்த ஆக்க பூர்வமான செயலை முன்னின்று செய்து கொண்டிருந்த என்.கிருஷ்ண குமார் கூறும்போது, ‘அதை யார் மூலமாக செய்தால் அது உரிய நேரத்தில் உதவி தேவைப்படு வோரை போய்ச் சேரும் என்பதை உணர்ந்தே, அத்தனை பேரும் ‘தி இந்து’ மூலம் நிவாரணப் பொருட்களை அளிக்க ஒன்று திரண்டு வந்துள்ளார்கள். அதை உணர்ந்தே இந்த பணியில் எங்களை நாங்கள் ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்.

இதில் மஹாவீர் ஜெயின், சூர்யநாராயணன், ராம்நகர் கோயில் நண்பர்கள் குழுவை சேர்ந்த நந்தகுமார், சர்வஜித், முரளி (எ) கிருஷ்ணன் ஆகியோர் அவரவர் களுக்கு தெரிந்தவர்களுக்கு முதலில் தகவல்கள் கொடுத்தார்கள். அந்த நண்பர்கள் அவர்களின் நட்பு வட்டங்களுக்கு தெரியப்படுத்தினார் கள். இந்த தொடர் சங்கிலி சென்று கொண்டேயிருக்கிறது.

தற்போது இந்த பணியில் பாரதி யார் பல்கலைக்கழக மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், பாரதிய வித்யா பவன் ஆர்.எஸ்.புரம், அஜ்ஜனூர் பள்ளி மாணவர்கள், ஐஓபி ஆபீசர்ஸ் யூனியன் நிர்வாகி கள், ராம்நகர் ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் எட்ஜி சேவா பொறுப்பாளர்கள் என பல ரும் ஈடுபட்டுக் கொண்டேயிருக் கிறார்கள். இதன்மூலம் வந்து கொண்டேயிருக்கும் பொருட்கள் தான் எங்களை ஓய்வில்லாது இயக்கிக் கொண்டிருக்கிறது.

பலர் பணமாக கொண்டு வந்து பொருட்களை வாங்கி அனுப்புங்கள் என்கிறார்கள். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில்லை. அவர் களிடம் ஸ்டவ், பெட்சீட், பால்பவுடர் உள்ளிட்ட பொருட்கள் இங்கே கிடைக்கிறது. அவற்றை வாங்கி அனுப்புங்கள் என்று சம்பந்தப்பட்ட கடைகளுக்கே அனுப்பி வாங்கி வருமாறு பணிக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார்.

படம்: ஜெ மனோகரன்

நோவா வழங்கிய ரூ.3.80 லட்சம் மதிப்புள்ள வெனிஷா ஸ்மார்ட் நாப்கின்ஸ்

கோவையில் நேற்று நோவா-ஹெல்த் அண்ட் ஹைஜீன் (NOVA- Health & Hygiene) நிறுவனத்தின் சார்பாக வெனிஷா ஸ்மார்ட் நாப்கின்ஸ் 18 பெட்டிகள் (ஒரு பெட்டியில் 96 பாக்கெட்ஸ்) வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3.80 லட்சம் ஆகும். இதனை சென்னை ஏரியா சேல்ஸ் மானேஜர் தலைமையில் கோவை விற்பனை பிரதிநிதிகள் சதாம், கார்த்தி ஆகியோர் வெள்ள நிவாரண நிதிக்கு ‘தி இந்து’ கோவை அலுவலகத்துக்கே வந்து வழங்கினர். அது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in