Published : 26 Dec 2015 10:42 AM
Last Updated : 26 Dec 2015 10:42 AM

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் மண்டபம் கட்டுவதை நிறுத்தக் கோரி வழக்கு: 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலின் ராஜகோபுர முகப்பில், தொல்லியல் மற்றும் அறநிலையத்துறை அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் மண்டப பணிகளை நிறுத்தக்கோரி திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.

புராதன கோயில் என்பதால், இதன் பராமரிப்புப் பணிகள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், குலசேகர ஆழ்வார் கூடம் சார்பில் நன் கொடை வசூல் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் 16 கால் மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மண்டபம் அமைப்பது தொடர்பாக, கோயில் நிர்வாகத்திடம் விண்ணப் பிக்கப்பட்டது. ஆனால், தொல்லி யல் சின்னங்களில் ஒன்றாக கோயில் உள்ளதால், கட்டுமானத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறை அனுமதியின்றி, கட்டுமான பணிகளுக்கு அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை என கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது.

ஆனால், கோயில் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே மண்டப கட்டுமான பணிகளை குலசேகர ஆழ்வார் கூடம் தொடங்கியது. இதையடுத்து, அனுமதியின்றி நடை பெறும் பணிகளை நிறுத்துமாறும் கோயில் நிர்வாக அதிகாரிகளை மிரட்டியதாகவும் செயல் அலுவலர் மாமல்லபுரம் போலீஸில் புகார் அளித்தார். இருப்பினும், மண் டபத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருந்தது. இதன்படி தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், மண்டபத்தின் கட்டுமான பணிகளை தடை செய்யக்கோரி கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கழுக்குன்றம் நீதி மன்றத்தில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மனுவை எதிர்த்து பாகவதர் கிருஷ்ணராமாநுஜதாசர் என்பவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரம் மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஸ்தலசயன பெருமாள் கோயில் செயல் அலு வலர் ஜெயச்சந்திரன் கூறிய தாவது: தொல்லியல் துறை தடை யால், அரசின் பல்வேறு திட்டங் களுக்கான கட்டிடப்பணிகள் முடங்கியுள்ளன. இந்த நிலை யில், குலசேகர ஆழ்வார் கூடத் தினர், கோயில் நிர்வாகத்தின் அனு மதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், பணிகளை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து, குலசேகர ஆழ்வார் கூட தலைவர் கிருஷ்ண ராமனுஜதாசர் கூறியதாவது: கோயில் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரியும், தொடர்ந்து பணி களை மேற்கொள்ள அறநிலையத் துறைக்கு உத்தரவிடக்கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x