

சிவகங்கை மாவட்டம் திருப்புனம் அருகே கொந்தகையில் மனித எலும்புகூடுடன் முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.13-ம் தேதியில் இருந்து 7-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை கருப்பு, சிவப்பு நிற பானை, கல்லான உழவு கருவி, பகடை, பாசிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கொந்தகையில் நேற்று ஒரு முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மனித எலும்புக்கூடு சிதைந்து காணப்பட்டது. இதையடுத்து எலும்புக்கூடு ஆணா? பெண்ணா? என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே 7-ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் 6 முதுமக்கள்தாழிகள் கிடைத்தன. அந்த முதுமக்கள்தாழிகளில் எலும்புகூடு கிடைக்கவில்லை.