Last Updated : 23 Apr, 2021 04:48 PM

 

Published : 23 Apr 2021 04:48 PM
Last Updated : 23 Apr 2021 04:48 PM

கோவிப்போர் மருந்து தட்டுப்பாடு: அதிக விலைக்கு விற்பதாக பாஜக புகார்

கோவிப்போர் (COOVIFOR TM) மருந்து புதுச்சேரியில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா மருந்துகள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ரெம்டெசிவர் மருந்தும் உள்ளதாகவும் மேலும் பத்தாயிரம் எண்ணிக்கையில் வாங்க நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் இன்று வெளியிட்ட அறிக்கை:
"கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை புதுச்சேரியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தொற்றின் மூலம் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரல் பாதிப்படையாமல் இருப்பதற்கு செலுத்த கூடிய மருந்து கோவிப்போர் (COOVIFOR TM) ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த புதுச்சேரியிலும் தட்டுப்பாடாக உள்ளது.

இந்த நிலையில் கோவிப்போர் (COOVIFOR TM) மருந்திற்கு அரசு நிர்ணயித்த விலையான ரூ. 750 முதல் ரூ. 800 வரையிலான விலையை விட அதிகமான விலைக்கு சுமார் 10,000 ரூபாய்க்கு மருந்தகங்களில் விற்கப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையையும், அரசு நிர்ணயித்த விலையில் பொதுமக்களுக்கு மருந்து கிடைத்திடவும் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

உயிர்காக்கும் மிக முக்கிய மருந்தை வெளி சந்தையில் விற்கும் நபர்கள், நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு பொது மருத்துவமனைகளில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் மருந்தினை கொள்முதல் செய்து இருப்பு வைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் நிலையை கருதினால், அவர்களால் இதை வாங்க முடியாமல் போகலாம். எனவே, ஏற்கெனவே ஊரடங்கால் வேலை, வருமானம் இழந்தவர்களின் நிலையை கருதி மருந்து கட்டணத்தை குறைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x