

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்நாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரும் வாக்காளர்களை வளமாக
கவனித்து வைத்திருக்கிறார்களாம். “நீங்களும் குடுங்க... நாங்கள் குடுக்கிறோம். மக்கள் யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடட்டும். தேவையில்லாம புகாரெல்லாம் குடுத்து பிரச்சினையாக்க வேண்டாம்” என்பது இரண்டு தரப்பும் போட்டுக் கொண்ட ஒப்பந்தமாம்.
இதன்படி, ஓட்டுக்கு 2 ஆயிரத்தை முதலில் இறக்கியது செந்தில் பாலாஜி தரப்பு. இதைப் பார்த்துவிட்டு ஓட்டுக்கு 3 ஆயிரம் என உயர்த்தியது விஜயபாஸ்கர் தரப்பு. சளைக்காத செந்தில்பாலாஜி தரப்பு, வாக்குப் பதிவு நாளன்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக் கதவுகளைத் தட்டி பெண் வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசும், ஆண் வாக்காளர்களுக்கு அட்வான்ஸ் டோக்கனும் கொடுத்து கவனிப்புக் கணக்கை முடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத விஜயபாஸ்கர் தரப்பு, கடைசி நேரத்தில் அத்தனை ஜோடி கொலுசுகளை எப்படிக் கொண்டு வந்தார்கள் என இப்போது களவிசாரணை நடத்திக் கொண்டிருக்கிறதாம்.