

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம், ஒன்றரை லட்சம் வாக்குகளுக்கு கரன்ஸி கட்டுகளை இறக்கினாராம். ஆனால், ஓட்டுக்குக் கொடுத்த பணம் பாதி வழியிலேயே நின்றுவிட்டதாம். வாக்குப் பதிவு முடிந்த பின்பே இந்த ரகசியத்தை(!) தெரிந்து கொண்ட தளவாய், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி பணத்தை பாதிவழியில் சுட்டவர்களை பெயரைக் சொல்லி அழைத்து ஒரு பிடி பிடித்தாராம். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிட்டிங் எம்எல்ஏவான திமுக வேட்பாளர் ஆஸ்டின், தனது வீட்டை அடகுவைத்து பணம் திரட்டி ஓட்டுக்குக் கொடுத்தாராம். தேர்தலில் வென்றுதான் இத்தனையும் மீட்க வேண்டும் போலிருக்கிறது!