Last Updated : 23 Apr, 2021 09:33 AM

 

Published : 23 Apr 2021 09:33 AM
Last Updated : 23 Apr 2021 09:33 AM

திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரை நூல்கள்: காரைக்குடி பள்ளித் தாளாளரின் குறள் நேசம்

காரைக்குடி தனியார் பள்ளி சார்பில் திருமண அழைப்பிதழுடன் வழங்கப்பட்ட திருக்குறள் உரைநூல்கள்.காரைக்குடி தனியார் பள்ளித் தாளாளர் தனது மகனின் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரை நூல்களையும் நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

வசதி படைத்தோரின் திருமண அழைப்பிதழ்கள் பெரும்பாலும் விலை உயர்ந்ததாகவும், பல்வேறு வடிவங்களிலும் இருக்கும். அந்த அழைப்பிதழ்கள் திருமணம் முடிந்தவுடன் பயனற்று போய் விடும். ஆனால், அதை மாற்றிக் காட்டும் விதமாக, காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளித் தாளாளர் சுப.குமரேசன், தனது மகனின் திருமணத்துக்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறளுக்கான உரை நூல்களையும் வழங்கி வருகிறார்.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துபால் ஆகிய 3 பிரிவுகளும் தனித்தனி நூல்களாக உள்ளன. இதில் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேளழகர் முதல் உரையெழுதிய அனைத்து ஆசிரியர்களின் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழை பெறும் உறவினர்கள், நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சுப.குமரேசன் கூறியதாவது: எங்கள் மகன் திருமணம் ஏப்.26-ல் நடக்கிறது. திருமண அழைப்பிதழுடன் சிறந்த பரிசு அளிக்க நினைத்தேன். பல இடங்களில் தேடியும் எதுவும் மனநிறைவாகத் தெரியவில்லை. அப்போது வான்புகழ் வள்ளுவரின்ன் வழிகாட்டு நுாலான திருக்குறளை பரிசளிக்கலாம் எனத் தோன்றியது.

வெறும் திருக்குறளை மட்டும் கொடுப்பதைவிட திருக்குறளுக்கு உரையெழுதியவர்களின் தொகுப்பையும் சேர்த்து கொடுக்க முடிவு செய்தேன். இதனை எங்கள் பள்ளி தமிழ்துறை தயாரித்துள்ளது. திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் நுாலை வழங்கிய போது, அதனை பெற்று கொண்ட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன். பலர் மொபைலிலும் தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகின்றனர், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x