

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி யடைந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கச்சா எண்ணெயின் விலையை வைத்தே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படு கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை 1980-களின் தொடக்கத்தில் இருந்ததை போல் குறைந்துள்ளது.
உற்பத்திச் செலவு, பணவீக்கம், போக்குவரத்துச் செலவு போன்ற வற்றை கணக்கில் கொண்டு 1980-களின் தொடக்கத்தில் விற்கப் பட்டதை விட சற்று அதிகமாய் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, தற்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற வற்றின் விலையை பாதியாகக் குறைக்க வேண்டும்.