

திருவிழாக்கள் நடைபெறும் காலங் களில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மலர் சாகுபடி விவசாயிகள், நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காமல் விரக்தி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் சம்பங்கி, மல்லிகைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். வாடிப்பட்டி அருகேயுள்ள செமினிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குருசாமி (50). கிணற்று பாசனத்தில் 2 ஏக்கரில் சம்பங்கி மலர் சாகுபடி செய்துள்ளார்.
தினமும் குறைந்தது ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 2 ஏக்கருக்கு 40 கிலோ அறுவடை செய்து மாட்டுத்தாவணி மலர்ச் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். திருவிழாக் காலங்களில் ஒரு கிலோ ரூ.350 வரை விலைபோகும். கரோனா ஊரடங்கு பரவல் காரணமாக திருவிழாக் களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. இதனால் பூக்களின் விலை வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
இதுகுறித்து செமினிப்பட்டி விவசாயி குருசாமி கூறியதாவது, சம்பங்கி மலர் சாகுபடியில், 3 ஆண்டுக்கு மேலாக வளர்ந்த கிழங்கை தேர்வு செய்து நடவு செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை ஊக்குவிப்பால் உழவு, நடவு, உரமிடுதலுக்கு மானியம் கிடைத் தது. தண்ணீர் சிக்கனத்துக்கு மழைத்தூவுவான் வசதி செய் துள்ளேன். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மலர் மாலைக்கு அதிக தேவையிருப்பதால் சம்பங்கி 1 கிலோ ரூ.350 வரை விலை போகும். தற்போது மீண் டும் கரோனா ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளதால் ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30 வரையே விற்பனையாவதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பூப் பறிப்பதற்கான கூலி கூட கிடைப் பதில்லை. இதனால் பூக்களை பறிக்காமலேயே விட்டு விட்டோம். கடந்தாண்டும் இதே போல் ஊரடங்கு அறிவிப்பால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது, என்றார்.