

ரெம்டெசிவர் மருந்து பத்து ஆயிரம் வாங்க புதுச்சேரி அரசு ஆர்டர் செய்துள்ளது.
கரோனாவை கட்டுபடுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் அடுத்தடுத்து இன்று இரவு வரை மூன்று கூட்டங்கள் நடைபெற்றன. கரோனா அதிகரிப்பால் ஒவ்வொரு பணிக்கும் சிறப்பு அதிகாரியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஆக்ஸிசன் கொள்முதல் மற்றும் கரோனா தனி கவனிப்பு மையங்கள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர் விக்ராந்த் ராஜாவும், தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் பணியில் உள்ளாட்சித்துறை செயலர் வல்லவனும், கூடுதல் மருத்துவ சாதனங்கள் வாங்க நிதித்துறை செயலர் அசோக்குமாரும், மருத்துவ உதவிகள் மற்றும் சிகிச்சைகளை சுகாதாரத்துறை செயலர் அருணும் கவனிக்க நியமிக்கப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகளை அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. ரெம்டெசிவர் மருந்து பத்து ஆயிரம் வாங்க ஆர்டர் செய்யப்பட்டதாக ராஜ்நிவாஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.