Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி வாக்கு எண்ணும் மேசைகளை குறைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை: சென்னையில் திமுகவினர் எதிர்ப்பு

சென்னை

சென்னையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி வாக்கு எண்ணும் மேசைகளை குறைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திய நிலையில், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கரோனா தொற்று காரணமாக, வாக்கு எண்ணும் மையங்களில் வழக்கமாக வைக்கப்படும் மேசைகளின் எண்ணிக்கையை குறைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தொடர்புடைய கட்சி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, அதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வழியாக அனுப்புமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் "வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்கள் 73 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா தொற்று பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க, மேசைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. சுற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது" என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

அதை அதிமுகவினர் ஏற்றுக்கொண்ட நிலையில், திமுகவினர் எதிர்த்தனர். வழக்கமான முறைப்படியே வாக்குகளை எண்ண வேண்டும். வாக்கு எண்ணுவதை தாமதிக்க கூடாது என்றனர். அது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து, உரிய தகவல் தெரிவிப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x