

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பதிவு நடைபெற்ற அன்றே பத்திரங்களை வழங்க வேண்டும், கரோனா கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்தவர்களின் பதி வை நிராகரிப்பது உட்பட பல் வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன.
இது தொடர்பாக அனைத்து துணை பதிவுத் துறை தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள், சார்-பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக பதிவுத் துறை தலைவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் கரோனா தொற்றைத் தடுக்க முகக்கவசம் அணிதல், கைகளை தண்ணீர் அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை பதிவு அலுவலகங்களுக்கு வரு கை தரும் பொதுமக்களும் கட் டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் உடல் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்த பிறகே பதிவுத் துறை அலுவ லகத்துக்குள் அனுமதிக்க வேண் டும்.
அலுவலகத்தில் பொதுமக்கள் நிற்க உரிய கட்டங்கள் குறியிட வேண்டும். காத்திருப்புக்குப் போதிய சமூக இடைவெளி (4 முதல் 6 அடி) விட்டு வளையம் வரைந்தும், உட்காரும் இடத்தில் சமூக இடைவெளி விட்டு இருக் கைகள் அமைக்க வேண்டும்.
ஸ்டார் 2.0 இணைய வழி சேவைகளான வழிகாட்டி மதிப்பு அறிதல், வில்லங்கச் சான்று வழங்குதல், சான்றிட்ட நகல்கள் வழங்குதல், திருமணச்சான்று வழங்குதல் ஆகியவற்றுக்கு இணைய வழிச் சேவையை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலக நுழைவு வாயிலில் அலுவலர் ஒருவரை அமர்த்தி, பதிவுப் பணியில் அவசரத் தேவை உள்ளவர்களை மட்டுமே அனு மதிக்க வேண்டும்.
இடைத்தரகர்களை முழுமை யாகத் தவிர்க்க வேண்டும். பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரும் அனைத்து பொதுமக்களின் பெயர், தொலைபேசி எண், உள்/வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.
ஆவணத்தைப் பதிவுக்காக தாக் கல் செய்பவர் மட்டுமே முதலில் அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். ஆவண விவரங்களை சார்-பதிவாளர் சரி பார்த்த பிறகே, ஆவணத்தில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஆவணப் பதிவு நிறை வடைந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியேறிய பிறகே அடுத்த ஆவணப்பதிவை சார் பதிவாளர் பரிசீலிக்க வேண்டும். பதிவு செய் யப்பட்ட ஆவணங்களை அன்றே திரும்ப வழங்க வேண்டும். அவ் வாறு வழங்குவதால் பொதுமக்கள் மீண்டும் பத்திரப்பதிவு அலுவல கத்துக்கு வருவது தவிர்க்கப்பட்டு நூறு சதவீத பதிவு இலக்கையும் எட்ட முடியும்.
பதிவுத் துறை அலுவலகங்களில் உள்ளேயும், வெளியேயும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விரல் ரேகை இயந்திரம், கணினி என அலுவலகத்தில் கையாளப்படும் அனைத்து இயந்திரங்களையும் பயன்படுத்தும் முன்பும், பின்பும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
அலுவலத்தில் யாருக்காவது கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டால், கணினி தொகுப்புப் பணியாளர்கள், ஐபி கேமரா பணியாளர் மற்றும் ஒளிவருடல் பணியாளர்களை கரோனா பரிசோதனைக்குட்படுத்த வேண் டும். மாவட்டப் பதிவாளர் நிலைக்கு கீழ் பணிபுரியும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களில் இணை நோய் உள்ளவர்களை உரிய மருத்துவச் சான்று பெற்றுக் கொண்டு பொதுமக்கள் தொடர்பு இல்லாத பணியில் நியமிக்க பதிவுத் துறை துணைத் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் இணைய வழியில் தணிக்கை பணி மேற்கொள்ளலாம்.
கரோனா தொற்றாளர்கள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்று, அப்பகுதியில் இருந்து பதிவுக்கு வருவோரின் ஆவணங்களை பரிசீ லிக்காமல், உரிய திருப்புச்சீட்டு வழங்கி பதிவை நிராகரிக்கலாம்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டால் தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம்.
கட் டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணியாளர்களை அலுவலகத் துக்குள் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.