பதிவு திருமணம் செய்துக்கொள்பவர்களுக்காக 50 சார்பதிவாளர் அலுவலகங்களில் மணவறை அலங்காரம் அமைப்பு

கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மணவறை அலங்காரம்.படம்: க.ராதாகிருஷ்ணன்
கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மணவறை அலங்காரம்.படம்: க.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

பதிவு திருமணம் செய்துகொள் பவர்களின் வசதிக்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மண வறை அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு சொத்துப் பத்திரங்கள் பதிவு செய்வது, திருமணப் பதிவு போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்களில் பலர் அங்கேயே மாலை மாற்றிக் கொண்டு, புகைப்படம் எடுத்து ஆதாரமாக சமர்ப்பிப்பார்கள்.

இந்நிலையில், இவர்களின் வசதிக்காக 50 சார் பதிவாளர் அலுவலகங்களில் மணவறை அலங்காரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கரூரில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம், கரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நம்பர் 2 இணை சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நம்பர் 1 இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் மணவறை அலங்காரம் நேற்று அமைக்கப்பட்டது.

இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஆதாரமாக இருக்கும் வகையில் மணவறை அலங்காரம் அமைக்கப்பட்டுள் ளது.

இங்கு பதிவு திருமணம் செய்து கொள்பவர்கள் மணவறை அலங்காரத்தின் கீழ் மாலை மாற்றி புகைப்படங்கள் எடுத்து, திருமண ஆதாரமாக பயன்படுத்திக் கொள் ளலாம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in