Published : 15 Dec 2015 09:03 AM
Last Updated : 15 Dec 2015 09:03 AM

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்க கவுன்சலிங்: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா தகவல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு மனக் கவலை மற்றும் தேர்வு பயத் தைப் போக்க உளவியல் ஆலோசனை (கவுன்சலிங்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் மழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் வகையில் பள்ளி மாண வர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் சபீதா நிருபர்களிடம் கூறிய தாவது: மழை வெள்ளத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 33 நாள் மழை விடுமுறைக்குப் பிறகு இன்று (நேற்று) 7,500 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை இழந்த மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை கள் வழங்கப்படும். மாணவர் களுக்கு நோய் பாதிப்பை கண்டறி யும் வகையில் மருத்துவப் பரி சோதனை முகாம் தொடங்கப்பட் டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு மனக்கவலைக்கு ஆளாகி யிருக்கும் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு கவலையைப் போக்கவும், பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவும் நாளை முதல் உளவியல் ஆலோசனை அளிக்கப் படும். பொதுத் தேர்வு எழுதுகின்ற மாணவ-மாணவிகள் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் குறைந்த பட்ச பாடத்திட்டம் அடங்கிய குறிப்பேடு அவர்களுக்கு தரப்படும்.

கனமழை காரணமாக பள்ளி களுக்கு அதிகப்படியான விடுமுறை விடப்பட்டதால் அதை ஈடுசெய்ய தினமும் சிறப்பு வகுப்புகள் நடத் தப்படும். மேலும், சனிக்கிழமை களில் வகுப்பு வைப்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவுசெய்துகொள்ளலாம்.

இவ்வாறு சபீதா கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “பாதிக்கப்பட்ட மாணவர்கள் உளவி யல் ஆலோசனைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடுவர். அதன் பின்னரும் அவர்களுக்குப் பிரச்சினை இருந்தால் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.

பின்னர் மைலாப்பூரில் உள்ள புனித எபாஸ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மையத்தில், புதிய கல்விச் சான்றிதழ்கள் வழங்குவதற் கான சிறப்பு முகாமை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்துப் பார்வையிட் டார். முதன்மை செயலாளர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் சிறப்பு முகாமை ஆய்வுசெய்தனர்.

அப்போது சபீதா கூறும்போது: “மழை வெள்ளத்தில் பள்ளிக்கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நகல் சான்றிதழ்கள் வழங்குவதற் காக சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 54 சிறப்பு முகாம்கள் இயங்குகின்றன. இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் செயல்படும். இங்கு சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x