மேலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மேலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

மேலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த பொன்னுபிள்ளை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை அள்ளும் வண்டி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கடந்தாண்டு 2020 அக்டோபர் 7-ம் தேதி பணியில் இருந்த போது என் கணவர் மயங்கி விழுந்தார். அவருக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்ததால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் 23-ல் உயிரிழந்தார்.

கரோனா முன்களப் பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் என் கணவர் உயிரிழந்துள்ளார். கரோனா முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தால் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணை அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்து, மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in